LATEST NEWS
மதுப்பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சி..! டாஸ்மாக்கில் இனி ரூ.500-க்கு மேல் பணம் வாங்க மாட்டாங்க… புதிய அதிரடி கட்டுப்பாடு அமலுக்கு வருது..!!
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் இனி 500 ரூபாய்க்கு மேல் ரொக்கமாகப் பணம் கொடுத்து மதுபானங்களை வாங்க முடியாது என்ற புதிய கட்டுப்பாடு அமலுக்கு வரவுள்ளது. டாஸ்மாக் கடைகளில் ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த அதிரடி முடிவை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்துள்ளது.
தற்போது டாஸ்மாக் கடைகளில் தினசரி சராசரியாக 150 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடந்தாலும், அதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான தொகை ரொக்கமாகவே வசூலிக்கப்படுகிறது. இதனால் கடைகளில் சேரும் பணத்தை அடுத்த நாள் வங்கியில் செலுத்த எடுத்துச் செல்லும்போது கொள்ளைச் சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகியுள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து மது வாங்குபவர்களுக்குப் பாட்டில்களை வழங்க ஊழியர்கள் தாமதம் செய்வதும், ரொக்கப் பணம் வாங்குவதற்கே அவர்கள் ஆர்வம் காட்டுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த புதிய டிஜிட்டல் முறை அமலுக்கு வருவதன் மூலம், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், கடைகளில் நிலவி வரும் சில்லறை தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளுக்கும் இது நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும், இது தொடர்பான முறையான அறிவுறுத்தல்கள் விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
