விஜய் நினைச்சிருந்தா அதிமுக ஆதரவோடு ஆட்சி அமைச்சிருக்கலாம் ஆனால்.. கம்யூனிஸ்டுகள் பேசுறது கவலையா இருக்கு… ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் நினைச்சிருந்தா அதிமுக ஆதரவோடு ஆட்சி அமைச்சிருக்கலாம் ஆனால்.. கம்யூனிஸ்டுகள் பேசுறது கவலையா இருக்கு… ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு..!!

Published

on

மதுராந்தகத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தவெகவின் கொள்கை பலம் குறித்து மிக முக்கியமான சில அரசியல் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தவெக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் நினைத்திருந்தால், மிக எளிதாக அதிமுக உடன் கூட்டணி அமைத்து, அவர்களுக்குப் பதவிகளை வழங்கி ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தவெக தலைவர் பதவிக்காக அரசியல் செய்ய வரவில்லை என்றும், தனது கொள்கைகளில் அவர் மிக உறுதியாக நின்றார் என்றும் ஆதவ் அர்ஜுனா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக அறிவிப்பு வெளியான உடனேயே இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக அரசை விமர்சிக்கத் தொடங்கியிருப்பது தமக்கு மிகுந்த வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார். கடந்த கால ஆட்சிகளில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறைகளில் ஊழல் நடக்கவில்லையா என்று கம்யூனிஸ்ட் தோழர்கள் நெஞ்சை நிமிர்த்திப் பதில் சொல்ல முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக வரும் காலங்களில் மற்ற கட்சிகளின் தயவின்றி, தனிப் பெரும்பான்மையுடன் நிலையான ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதைத் தொண்டர்கள் மத்தியில் அவர் தீவிரமாக வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

அமைச்சரின் இந்த அதிரடியான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக அரசுக்குச் சட்டமன்றத்திலும் வெளியிலும் தொடர்ந்து முட்டுக்கட்டை மற்றும் குடைச்சல்களைக் கொடுத்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தங்களது தற்போதைய அல்லது எதிர்கால ஆதரவுப் பட்டியலிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கும் ஒரு அரசியல் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில், எடப்பாடி தொகுதியில் தவெக சின்னத்தில் நின்றால் தவெக எளிதாக வெல்லும் என்று ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in