“அவ போக்கு சரியில்ல” மீண்டும் முதல் மனைவியை தேடிப்போன கணவன்… நேரம் பார்த்து கதையை முடித்த 2-ஆவது மனைவி.. கள்ளகாதலனோடு சேர்ந்து செய்த பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அவ போக்கு சரியில்ல” மீண்டும் முதல் மனைவியை தேடிப்போன கணவன்… நேரம் பார்த்து கதையை முடித்த 2-ஆவது மனைவி.. கள்ளகாதலனோடு சேர்ந்து செய்த பயங்கரம்..!!

Published

on

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், தனது முதல் மனைவியுடன் மீண்டும் நெருக்கமான ராம் கிஷோர் வால்மிகி என்ற நபரை, அவரது இரண்டாவது மனைவி சுபியா பானோ தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். சுபியா பானோவுக்கு முன்னா (52) என்பவருடன் இருந்த கள்ளத்தொடர்பு கணவருக்குத் தெரிந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராம் கிஷோர், தனது முதல் மனைவியைச் சந்தித்துப் பண உதவி செய்யத் தொடங்கியதால், அவரைத் தீர்த்துக்கட்ட இரண்டாவது மனைவி சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி நள்ளிரவு, ராம் கிஷோர் உறங்கிக் கொண்டிருந்தபோது சுபியா பானோ தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர் முகமது இக்பாலை வீட்டிற்குள் வரவழைத்துள்ளார். அவர்கள் ராம் கிஷோரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததோடு, தரையில் இருந்த ரத்தக்கறைகளைச் சிமெண்ட் பூசி மறைக்க முயன்றுள்ளனர். பின்னர், சுபியா பானோவின் 16 வயது மகனின் உதவியுடன் உடலை ஒரு மரப்பெட்டிக்குள் மறைத்து, ரிக்க்ஷா மூலம் எடுத்துச் சென்று அருகில் உள்ள கால்வாய் பாலத்தின் அடியில் வீசியுள்ளனர்.

Advertisement

ராம் கிஷோரின் முதல் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லக்னோ போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உடலைக் கடத்தப் பயன்படுத்திய ரிக்க்ஷாவைச் சுற்றியுள்ள 180-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொலையாளிகளைக் கண்டறிந்தனர். தற்போது இரண்டாவது மனைவி, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பரைக் கைது செய்துள்ள போலீசார், கொலையில் தொடர்புடைய 16 வயது மகனையும் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in