LATEST NEWS
“இவர் தான் நிஜ ராணி லட்சுமிபாய்..!” மெடிக்கல் ஸ்டோரில் அநாகரீக அத்துமீறிய உரிமையாளர்.. தைரியமாக பெண் கொடுத்த மரண அடி.. வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், மருந்து வாங்க வந்த ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர், மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, அவரை நடுரோட்டில் செருப்பால் அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரேலியின் பஹேரி பகுதிக்கு மருந்து வாங்கச் சென்ற அந்தப் பெண்ணுக்கும், கடை உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது; அப்போது அந்த நபர் அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அங்கேயே தனது செருப்பைக் கழற்றி மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளரை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார். அந்தப் பெண்ணின் இந்த தைரியமான செயலைக் கண்ட நெட்டிசன்கள், அவரை “ராணி லட்சுமிபாய்” எனப் பாராட்டி வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ வெள்ளிக்கிழமையன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் தற்போது இதில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்துப் பேசியுள்ள பஹேரி காவல் நிலைய அதிகாரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
