CRIME
“சென்னையில் பயங்கரம்.. மர்ம நபரின் பாலியல் அழைப்பு..” நம்பிச் சென்ற 31 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. உறைந்து போக வைக்கும் பின்னணி..!!
சென்னையில் பாலியல் உறவுக்கு அழைத்த நபரை நம்பிச் சென்ற 31 வயது இளம்பெண் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைத்ததை அடுத்து, அந்தப் பெண் அரும்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் வெளியே வந்தபோது, பின்தொடர்ந்து வந்த அந்த நபர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
அதற்கு அந்தப் பெண் மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணைக் குத்திவிட்டுத் தப்பியோடிவிட்டார். காயமடைந்த பெண்ணை மீட்ட பொதுமக்கள் அரும்பாக்கம் போலீசாருக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து, அவர் சிகிச்சைக்காக கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் கொடூரச் சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெண்ணைக் கத்தியால் குத்திவிட்டுப் பணத்தைப் பறிக்க முயன்று தலைமறைவாக இருக்கும் அந்த மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றன
