“தேயிலைத் தோட்டத்துக்கு வா..” ஆசையாக அழைத்த காதலி.. நேரில் சென்ற கள்ளகாதலனுக்கு காத்திருந்த கொடூர முடிவு.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“தேயிலைத் தோட்டத்துக்கு வா..” ஆசையாக அழைத்த காதலி.. நேரில் சென்ற கள்ளகாதலனுக்கு காத்திருந்த கொடூர முடிவு.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

அசாம் மாநிலம் ஜோர்ஹட் மாவட்டத்தில், பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியுடன் திருமணத்திற்கு மீறிய தொடர்பில் இருந்த 31 வயது இளைஞரான அனில் என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7-ம் தேதி அனில் காணாமல் போனதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், மரியானி காவல் துறையினர் போக்தோய் ஆற்றங்கரையில் இருந்து அவரது அழுகிய உடலை மீட்டனர். விசாரணையில், அனிலின் கள்ளக்காதலியான அனிமா அவரைத் திட்டமிட்டு தேயிலைத் தோட்டப் பகுதிக்கு வரவழைத்ததும், அங்கு மறைந்திருந்த அனிமாவின் கணவர் கபில், அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஆகியோர் சேர்ந்து அனிலை கத்தியாலும் அரிவாளாலும் வெட்டி கொடூரமாகத் தலை துண்டித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது.

கொலைக்கு பிறகு அனிலின் சடலத்தை ஒரு சாக்கில் கட்டி ஆற்றங்கரையில் புதைத்த குற்றவாளிகள், தங்களின் குற்றத்தை காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தத் திட்டமிட்ட கொடூரக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய கபில் கர்மாகர், அவரது மனைவி அனிமா கர்மாகர் உள்ளிட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட நால்வர் மீதும் கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்ற உத்தரவின்படி, அவர்கள் நால்வரும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in