“என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா..?” ஆத்திரத்தில் காதலன் ஆடிய வெறியாட்டம்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த காதலி.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா..?” ஆத்திரத்தில் காதலன் ஆடிய வெறியாட்டம்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த காதலி.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்துவிட்டு, பெற்றோரின் எதிர்ப்பு காரணமாகத் தன்னைத் திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணை, ஏ.சி. மெக்கானிக் ஒருவர் மருந்தகத்திற்குள் புகுந்து சரமாரியாகக் கத்தியால் வெட்டிய கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி அடுத்த சின்னபுறங்கனி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (25) என்ற வாலிபர் சென்னையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் பண்ருட்டியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வரும் 23 வயது இளம்பெண்ணை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் வீட்டில் இந்த காதலுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் கடந்த ஓராண்டாக அந்தப் பெண் பேசுவதைத் தவிர்த்து வந்ததால், ஆத்திரமடைந்த சந்தோஷ் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று மதியம் இளம்பெண் மருந்தகத்தில் பணியில் இருந்தபோது அங்கு வந்த சந்தோஷ், திருமணம் செய்ய மறுப்பது ஏன் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைத் தாக்கியுள்ளார். இதில் அந்தப் பெண்ணின் கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் 6 இடங்களில் பலத்த வெட்டு விழுந்ததால் அவர் வலியால் அலறியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தப்பியோட முயன்ற சந்தோஷைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்துப் போலீசில் ஒப்படைத்ததுடன், படுகாயமடைந்த பெண்ணைக் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வாலிபர் சந்தோஷைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in