காவல்துறைக்கே இந்த நிலையா..? கடலூர் அருகே இன்ஸ்பெக்டர் வேலுமணி மீது கொடூரத் தாக்குதல் – அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காவல்துறைக்கே இந்த நிலையா..? கடலூர் அருகே இன்ஸ்பெக்டர் வேலுமணி மீது கொடூரத் தாக்குதல் – அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ..!!

Published

on

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே, இருதரப்பு இளைஞர்களுக்கு இடையே ஏற்படவிருந்த வன்முறை மோதலைத் தடுத்து நிறுத்தச் சென்ற காவல் துறையினர் மீது ஒரு கும்பல் கண்மூடித்தனமான கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வந்தவர்கள் என்றும் பாராமல், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் வேலுமணி உள்ளிட்ட போலீசார் மீது இந்தத் தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கலவரச் சூழலுக்கு மத்தியில், போதையில் இருந்த இளைஞர் ஒருவன் காவல் ஆய்வாளர் வேலுமணியின் சட்டையைப் பிடித்து இழுத்து, அவரை மிகக் கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஆகியோரும் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூன்று போலீசாரும் உடனடியாக மீட்கப்பட்டு, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

காவல்துறையினர் மீதே பொதுவெளியில் நடத்தப்பட்ட இந்தத் துணிச்சலான தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதோடு பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கடலூர் சைபர் கிரைம் மற்றும் உள்ளூர் போலீசார், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முக்கியக் குற்றவாளிகள் 3 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in