CRIME
“என் மனைவியோடு உல்லாசமாக இருந்ததால் கொன்றேன்” பீர் பாட்டிலால் கழுத்தை குத்திக் கொன்று கடற்கரையில் புதைக்கப்பட்ட வாலிபர்.. நண்பன் செய்த கொடூரம்..!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாயமான 19 வயது வாலிபர் பிரசாந்த், சென்னை பழவேற்காடு கடற்கரையில் கொன்று புதைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக அவரது நண்பர்களான தேவராசு (19) மற்றும் தினேஷ் (23) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். டைல்ஸ் வேலை செய்து வந்த பிரசாந்த், சென்னையில் வீட்டு வேலை செய்யும் தனது தாயைப் பார்க்க வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற நிலையில் மாயமானதால், புதுப்பேட்டை போலீஸார் நடத்திய விசாரணையில் இக்கொலை அம்பலமானது.
காவல்துறையினரின் தீவிர விசாரணையில், கைதான தேவராசுவின் மனைவியுடன் கொலையான பிரசாந்திற்குத் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. சென்னைக்கு வந்த பிரசாந்த், தனது நண்பரின் மனைவியுடன் பல்வேறு இடங்களுக்குச் சுற்றி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த கணவர் தேவராசு, தனது மனைவியுடன் தவறான உறவில் இருந்த பிரசாந்தைப் பழிவாங்கத் திட்டம் தீட்டியுள்ளார்.
இதன்படி, மற்றொரு நண்பரான தினேசுடன் சேர்ந்து பிரசாந்தை மது குடிக்கலாம் என ஆள்நடமாட்டம் இல்லாத பழவேற்காடு சாத்தான்குப்பம் கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குக் பிரசாந்தை கொலை செய்து, உடலை மணலில் புதைத்துள்ளனர். குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருப்பாலைவனம் போலீஸார் பிரசாந்தின் உடலைத் தோண்டி எடுத்துப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.
