அய்யோ கடவுளே.. விளையாடிக் கொண்டிருந்த 2 மகன்கள்.. பெற்ற தாயே செய்த கொடூரம்.. நெஞ்சை உறைய வைக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ கடவுளே.. விளையாடிக் கொண்டிருந்த 2 மகன்கள்.. பெற்ற தாயே செய்த கொடூரம்.. நெஞ்சை உறைய வைக்கும் சோகம்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் தாரூர் மண்டலத்திற்குட்பட்ட சிந்தகுண்டா கிராமத்தில் தாய் ஒருவர் தனது இரு மகன்களையும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த பெண் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த வாசவி (33) என்பது தெரியவந்துள்ளது. இவரது கணவர் பூபதி ரெட்டி தாண்டூரில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாக விகாராபாத் நகரில் வசித்து வந்த இந்தத் தம்பதியினருக்கு, தங்களது பிள்ளைகளின் கல்விக்காக அங்கு தங்க நேரிட்டது.

வார இறுதி விடுமுறையைக் கழிப்பதற்காகச் சனிக்கிழமை அன்று பூபதி ரெட்டி தனது குடும்பத்தினரைக் காரில் சிந்தகுண்டாவில் உள்ள சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிட்டு, பின்னர் தாண்டூருக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெளியே விளையாடிக் கொண்டிருந்த தனது இரு மகன்களான சஹர்ஷ் ரெட்டி (8) மற்றும் வேதார்ஷ் ரெட்டி (4) ஆகியோரின் உயிரை வாசவி மாய்த்துவிட்டு, பின்னர் தானும் உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. வாசவியின் உறவினர் இந்தத் துயரச் சம்பவத்தைக் கண்டு உடனடியாக போலீசாருக்கும் கணவருக்கும் தகவல் அளித்தார். இக்கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in