“நீங்களே போலீஸ கூப்பிடுங்க..!” டிக்கெட் கேட்ட டிடிஇ… ஆடைகளைக் கிழித்து பெண் செய்த அசிங்கமான காரியம்.. இறுதியில் ரயில்வே ஊழியர் கொடுத்த மரணமாஸ் ட்விஸ்ட்.. வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நீங்களே போலீஸ கூப்பிடுங்க..!” டிக்கெட் கேட்ட டிடிஇ… ஆடைகளைக் கிழித்து பெண் செய்த அசிங்கமான காரியம்.. இறுதியில் ரயில்வே ஊழியர் கொடுத்த மரணமாஸ் ட்விஸ்ட்.. வைரல் வீடியோ..!!

Published

on

ரயில் பயணத்தின் போது டிக்கெட் பரிசோதகர் பெண் பயணி ஒருவரிடம் டிக்கெட்டைக் கேட்டதற்கு, அவர் டிக்கெட்டைக் காட்டாமல் லஞ்சம் கொடுக்க முயன்றதுடன், ஆத்திரத்தில் தனது சொந்த ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அராஜகம் செய்த விசித்திரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பெண் டிக்கெட்டைக் காட்டுவதற்குப் பதிலாகப் பணத்தை நீட்டியதுடன், தனது சகோதரரும் ஒரு டிடிஇ தான் என்று கூறி மிரட்டத் தொடங்கியுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென அவர் தனது ஆடைகளைத் தானே கிழித்துக் கொண்டு, டிக்கெட் பரிசோதகர் தன் மீது தவறான நோக்கத்தில் கை வைத்ததாகப் பழி சுமத்த முயன்றுள்ளார்.

இருப்பினும், அந்தப் பெண் செய்த நாடகத்தை முன்கூட்டியே கணித்த டிடிஇ, தனது மொபைல் போன் மூலம் இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் அமைதியாக வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணிடம் பயப்படாமல் “நீங்களே 112 என்ற அவசர உதவி எண்ணை அழைத்து போலீஸாரைக் கூப்பிடுங்கள்” என்று நிதானமாகக் கூறியுள்ளார். இந்தத் திடுக்கிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளைக் கையாளுவதற்கும், பொய்ப் புகார்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் ரயில்வே ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பும், ‘பாடி கேமரா’ வசதியும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in