ராணுவத்தை ஏமாற்றிய AI சாட்பாட்.. சீனக் கப்பல் மீது தாக்குதல் நடத்த முயன்ற அமெரிக்கா… இறுதி நிமிடத்தில் தடுத்த உளவுத்துறை – பின்னணியில் இருந்த பேரதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ராணுவத்தை ஏமாற்றிய AI சாட்பாட்.. சீனக் கப்பல் மீது தாக்குதல் நடத்த முயன்ற அமெரிக்கா… இறுதி நிமிடத்தில் தடுத்த உளவுத்துறை – பின்னணியில் இருந்த பேரதிர்ச்சி..!!

Published

on

அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் நிலவிய காலகட்டத்தில், அமெரிக்க ராணுவத்தின் உளவுத்துறைக்குக் கிடைத்த ஒரு தவறான அறிக்கையால், அமெரிக்கா மற்றும் சீனா இடையே பயங்கரமான போர் மூளும் அபாயம் ஏற்பட்டு, இறுதி நிமிடத்தில் நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சீனக் கப்பல் ஒன்றில் அணு ஆயுதத் தயாரிப்பிற்குப் பயன்படும் பொருட்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அமெரிக்க ராணுவம் கப்பலைக் கைப்பற்ற போர் விமானங்களுடன் வீரர்களைத் தயார் நிலையில் நிறுத்தியது. ஆனால், தாக்குதல் தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அந்த அறிக்கையைத் தீவிரமாக ஆய்வு செய்தபோதுதான், அது ஒரு AI Chatbot மூலம் உருவாக்கப்பட்ட முற்றிலும் தவறான அறிக்கை என்பது தெரியவந்தது.

ஹவாயைச் சேர்ந்த இளம் புலனாய்வு ஆய்வாளர் ஒருவர் சீனக் கப்பலின் சரக்கு விவரங்கள் குறித்து AI சாட்பாட்டிடம் கேட்டபோது, அது தவறாகப் புரிந்து கொண்டு அணு ஆயுதப் பொருட்கள் இருப்பதாகப் போலி அறிக்கை அளித்துள்ளது. அந்த ஆய்வாளர் சரிபார்ப்பின்றி அதனை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

Advertisement

இச்சம்பவம் ராணுவத்தில் AI பயன்பாட்டின் ஆபத்தை உணர்த்தியுள்ளது; தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் பெரும் உலகப் போர் வெடித்திருக்கும் என்பதால் மனிதர்களின் இறுதிச் சரிபார்ப்பு அவசியமென அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in