LATEST NEWS
உலக நாடுகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்…அமெரிக்கா – ஈரான் திடீர் ஒப்பந்தம்…இனி கச்சா எண்ணெய் விலை சல்லிசாக குறையப்போகுதா? ஹார்முஸ் நீரிணையில் நடந்த ‘அந்த’ மர்ம விபரீதம்…பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ஆசிய நாடு…!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மத்தியஸ்தத்தில் உருவாக்கப்பட்ட ‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்’ மின்னணு (Digital) முறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் இணையம் வழியாகக் கையெழுத்திட்டுள்ளதை இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. ஞாயிற்றுக்கிழமையே இதற்கான அறிவிப்பு வெளியான போதிலும், இரு நாடுகளும் விதிமுறைகளை முழுமையாக ஆய்வு செய்ய 4 நாட்கள் எடுத்துக்கொண்டன. இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருவதைத் தொடர்ந்து, 60 நாட்கள் பேச்சுவார்த்தைக்கான காலம் துவங்குகிறது. இதற்காக இரு நாடுகளின் பேச்சுவார்த்தைக் குழுக்களும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்குச் செல்லவுள்ளன.
இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்ததன் மூலம், உலக நாடுகள் அனைத்தும் பெரும் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளன. அதற்கு முக்கியக் காரணம், உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் நீரிணையில் அரங்கேறப்போகும் இரண்டு அதிரடி மாற்றங்கள் தான். முதலாவதாக, ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் நீரிணையை உடனடியாக மீண்டும் திறந்துவிடுகிறது. இரண்டாவதாக, அமெரிக்கா ஈரான் மீது விதித்திருந்த கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்கிக் கொண்டு, இன்று அல்லது நாளைக்குள் ஹார்முஸ் பகுதியை விட்டுத் தனது கடற்படையைக் காலி செய்யவுள்ளது. இந்த இரு முக்கிய நடவடிக்கைகளால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்து, விரைவில் ஒரு பேரல் 65-70 டாலர் என்ற பழைய நிலைக்குத் திரும்பும் என்பதால் உலகப் பொருளாதாரம் பெரும் நிம்மதி அடைந்துள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, போரினால் பாதிக்கப்பட்ட ஈரானின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக 300 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்டப்படவுள்ளது. ஈரானின் அண்டை நாடுகள் இந்த நிதிக்கான பங்களிப்பை வழங்கவுள்ளன. ஜெனீவாவில் கூடும் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கவுள்ளனர். இந்த 60 நாட்கள் காலக்கெடுவை தேவைப்பட்டால் நீட்டிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருந்தாலும், அதே சமயம் “இந்த ஒப்பந்தத்தை ஈரான் முழுமையாகக் கடைப்பிடிக்காவிட்டால், அந்நாட்டின் மீது குண்டு வீசி அழிப்போம்” என்றும் தனது பாணியில் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இருப்பினும், இந்த வரலாற்று ஒப்பந்தம் மத்திய கிழக்கில் புதிய அமைதியை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் நம்புகின்றனர்.
