CRIME
ஐயோ இது என்ன கொடுமை..! நண்பனின் வீட்டில் தங்கிய 8 வயது சிறுவன்.. கொடூரமாக சீரழித்து கொலை செய்த தந்தை.. நீதிமன்றம் கொடுத்த அதிரடித் தீர்ப்பு..!!
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 அன்று நடந்த கொடூரச் சம்பவம் ஒன்று தற்போது நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த 8 வயது சிறுவனை, அந்த நண்பனின் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நடந்தபோது, அச்சிறுவனின் நண்பன் அதே அறையில் உள்ள அடுக்கு படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், குற்றவாளி தொடர்ச்சியாகப் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்த நபர் என்பதும், இதுவரை சுதந்திரமாக நடமாடி வந்தவர் என்பதும் மேற்கு கேப் உயர் நீதிமன்றத்தில் தெரியவந்தது.
இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 8 வயது சிறுவனைக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்குக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு, இத்தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசியப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டு, குழந்தைகளுடன் பணியாற்றுவதற்கும் துப்பாக்கி வைத்திருப்பதற்கும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் குற்றவாளி பரோல் கோரினால், அதை எதிர்க்கும் உரிமை பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயாருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இத்தீர்ப்பின் மூலம் அக்குழந்தையின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைத்துள்ளது.
