LATEST NEWS
“ஐயோ டீச்சர் காப்பாத்துங்க” பள்ளி கழிப்பறையில் 10th மாணவி கதறல்… சுவர் ஏறி குதித்த மர்ம கும்பல்… மயக்க மருந்து கொடுத்து அரங்கேறிய கொடூரம்..!!
சென்னை வண்டலூர் அருகே உள்ள அரசுப் பள்ளி கழிப்பறையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட கொடூர சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்றபோது, மர்ம கும்பல் ஒன்று பள்ளியின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளது. அந்த கும்பலைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட முயன்றபோது, அவருக்குக் கட்டாயப்படுத்தி மயக்க மருந்து கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளி நேரத்தில், பாதுகாப்பாக இருக்க வேண்டிய பள்ளி வளாகத்திற்குள்ளேயே மாணவிக்கு நேர்ந்துள்ள இந்த கொடூரம் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக்கு வெளியே திரண்டு தங்களின் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இக்குற்றத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போலீசாருக்குக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
