CRIME
அடசசீ.! NCC ல சேரணுமா..? “அப்போ என்கூட உல்லாசம் இருக்கணும்” கல்லூரி மாணவிகளுக்கு வலைவீசிய காமப் பேராசிரியர்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!!
மத்தியப் பிரதேசம் பாலாகாட் மாவட்டத்தில் உள்ள அரசுப் பேராசியர் ஒருவர், தேசிய மாணவர் படையில் சேர்ப்பதற்குப் பதிலாக மாணவிகளிடம் பாலியல் சலுகை கோரிய அதிர்ச்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பைகார் பகுதியில் உள்ள அரசு அரண்ய பாரதி கல்லூரியின் உதவிப் பேராசிரியரும், என்சிசி பொறுப்பாளருமான டாக்டர் ராஜேந்திர சிங் குஷ்ராம் என்பவர் மீது இந்த பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்லூரி மாணவி ஒருவர் அளித்த எழுத்துப்பூர்வமான புகார் மற்றும் ஆடியோ ஆதாரங்களின் அடிப்படையில் பைகார் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட மேலும் மூன்று மாணவிகள் தைரியமாக முன்வந்து அதே பேராசிரியருக்கு எதிராகப் புகார் அளித்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 4 மாணவிகள் இவரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்சிசியில் சேர்க்கை பெற்றுத் தருவதாகக் கூறி, செல்போன் மூலம் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி அவர் இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 75(2)-ன் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பேராசிரியர் ராஜேந்திர சிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதே நேரத்தில், இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, மத்தியப் பிரதேச உயர் கல்வித் துறை அந்தப் பேராசிரியரைத் தற்காலிகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் அம்மாநிலக் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
