“ஐயோ அப்பா.. என்னை விட்டுடுங்க.. செத்துடுவேன்” காவல் நிலையத்திற்குள் வாலிபரை லத்தியால் வெளுத்து வாங்கிய போலீஸ்… நெஞ்சை பதறவைக்கும் கொடூர வீடியோ வைரல்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ அப்பா.. என்னை விட்டுடுங்க.. செத்துடுவேன்” காவல் நிலையத்திற்குள் வாலிபரை லத்தியால் வெளுத்து வாங்கிய போலீஸ்… நெஞ்சை பதறவைக்கும் கொடூர வீடியோ வைரல்..!!

Published

on

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள சிரையா காவல் நிலைய வளாகத்தில், லத்தியால் வாலிபர் ஒருவரை காவல் அதிகாரி கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காவல்துறை மீது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சாதாரண உடையில் இருக்கும் ஒரு காவல் அதிகாரி கையில் தடியை வைத்துக்கொண்டு கீழே அமர்ந்திருக்கும் வாலிபரை இரக்கமின்றித் தாக்குகிறார். வலியால் துடித்த அந்த வாலிபர், “ஐயோ அப்பா.. என்னை விட்டுடுங்க.. செத்துடுவேன்” என கதறி அழுவது பார்ப்போரைக் கண் கலங்க வைக்கிறது.

இந்த கொடூரத் தாக்குதலுக்குள்ளான வாலிபர், சிரையா காவல் எல்லைக்குட்பட்ட பெல்ஹி கிராமத்தைச் சேர்ந்த துன்துன் சாஹ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 25 அன்று மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில் இவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாகவே, காவல் நிலையத்திற்குள் வைத்து அவரை இவ்வாறு மிருகத்தனமாகத் தாக்கியது ஏன் என்ற வலுவான கேள்வி தற்போது பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Advertisement

இதற்கிடையே, லத்தியால் வாலிபரைத் தாக்கிய அந்த அதிகாரி சிரையா காவல் நிலையத்தின் கூடுதல் காவல் ஆய்வாளர் மதுகர் குமார் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட துன்துன் சாஹ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அபராதம் செலுத்திய பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப வேண்டிய ஒரு கைதியைச் சட்டத்தை மீறி அடித்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, மோதிஹாரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) ஸ்வர்ண் பிரபாத் உடனடியாக இந்தச் சம்பவத்தை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், வாலிபரைத் தாக்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள கூடுதல் காவல் ஆய்வாளர் மதுகர் குமாரிடம் இந்த அத்துமீறல் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். துறையினரின் விரிவான விசாரணைக்குப் பின்னரே இந்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in