“என்ன கொடுமைடா இது..” கிட்டாரைப் பார்த்து மனுஷன்னு நினைச்சு ஃபைன்.. AI கேமரா அனுப்பிய ரூ.500 சலானைப் பார்த்து ஷாக்கான பைக் ஓட்டி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்ன கொடுமைடா இது..” கிட்டாரைப் பார்த்து மனுஷன்னு நினைச்சு ஃபைன்.. AI கேமரா அனுப்பிய ரூ.500 சலானைப் பார்த்து ஷாக்கான பைக் ஓட்டி..!!

Published

on

பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் போக்குவரத்து கண்காணிப்பு கேமரா ஒன்று, இருசக்கர வாகனத்தில் தனியாகச் சென்ற நபரின் முதுகில் கட்டப்பட்டிருந்த கிட்டாரை, தலைக்கவசம் அணியாத பின்னால் அமர்ந்த பயணி எனத் தவறாகக் கணித்து ரூ.500 அபராதம் விதித்துள்ளது. சௌவிக் தத்தா என்ற நபர் தனது மனைவியின் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி தனியாகச் சென்றுள்ளார். அப்போது அவரது முதுகில் கிட்டார் மாட்டப்பட்டிருந்தது. ஆனால், AI கண்காணிப்பு கேமரா அந்த கிட்டாரைப் பின்னால் அமர்ந்திருக்கும் நபர் எனக் தவறாகப் புரிந்துகொண்டு அபராதச் சலான் அனுப்பியுள்ளது.

இந்த விசித்திரமான சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சௌவிக் தத்தா, அபராதத்துடன் இணைக்கப்பட்டிருந்த புகைப்படத்தைப் பகிர்ந்து X தளத்தில் பதிவிட்டார். அதில் தான் தலைக்கவசம் அணிந்து தனியாகச் செல்வதும், முதுகில் கிட்டார் இருப்பதும் தெளிவாகத் தெரிவதைச் சுட்டிக்காட்டி, பெங்களூரு போக்குவரத்து காவல்துறையைத் தொடர்பு கொண்டு இந்தத் தவறான அபாரதத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்தார். இதைப் பார்த்த பெங்களூரு போக்குவரத்து காவல்துறை, அந்தப் பதிவிற்குப் பதிலளித்து, அபராதத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

இந்தத் தவறு குறித்த செய்தி இணையத்தில், குறிப்பாக ரெடிட் போன்ற சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் AI கேமராவின் இந்தத் தவறான கணிப்பைக் கிண்டல் செய்து மீம்களைப் பதிவிட்டு வருகின்றனர். AI கேமராக்களுக்கு இன்னமும் கூடுதல் பயிற்சிகள் தேவை என்றும், கிட்டாரை மனிதனாகக் கருதியது வேடிக்கையாக உள்ளது என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தானியங்கி போக்குவரத்து கண்காணிப்பு அமைப்புகள் சில சமயங்களில் பொருட்களையும் சூழ்நிலைகளையும் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும் என்பதால், மனித ஆய்வும் இத்தகைய தவறான அபாரதங்களை ரத்து செய்யும் நடைமுறைகளும் அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in