LATEST NEWS
“சமாதானம் பேசியும் கேக்கல…” ஓடும் ரயில் முன் பாய்ந்த ஜோடி.. கதறும் 2 பிஞ்சு குழந்தைகள்..! நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் மண்டியா அருகே ஓடும் ரயில் மோதி 25 வயது சஹானா மற்றும் 23 வயது ராகுல் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். வி.சி.பார்ம் ரயில்வே கேட் அருகே அவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்களா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்டியாவைச் சேர்ந்த சஹானா, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வீரேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு 6 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர். பெங்களூரு மாதநாயக்கனஹள்ளியில் வசித்து வந்தபோது, அதே கட்டிடத்தில் குடியிருந்த ராகுல் என்பவருடன் சஹானாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணவருக்குத் தெரியவந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் சமாதானம் செய்தும் பிரச்சினை தீராத நிலையில், சமீபத்தில் மீண்டும் ஏற்பட்ட தகராறால் சஹானா பெங்களூருவில் இருந்து வெளியேறி மண்டியாவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், ராகுலும் மண்டியாவுக்கு வந்துள்ள சூழலில், வி.சி.பார்ம் ரயில் கேட் அருகே இருவரும் ரயில் மோதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த மண்டியா ரயில்வே போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு மிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வந்த குடும்பத்தினர் உடல்களைப் பார்த்து கதறி அழுத நிலையில், இருவரும் உயிரிழந்த சூழல் மற்றும் அதற்கான சரியான காரணம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
