CRIME
“சந்தேகத்தால் வந்த வினை!..” யூடியூப் செய்தியாளரை துடிதுடிக்கக் கொன்ற 40 வயது மனைவி.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் அசோக் ரோடு பகுதியில், யூடியூப் சேனல் செய்தியாளரான மோகன் (45) என்ற நபர் அவரது மனைவி ஜமுனாவால் (40) கல்லைக்கொண்டு அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கணவனின் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகம் மற்றும் அவர் கொடுத்து வந்த தொடர் மன உளைச்சல் காரணமாகவே ஆத்திரமடைந்த மனைவி ஜமுனா இந்தத் தீவிர முடிவை எடுத்துத் தனது கணவரைத் தீர்த்துக்கட்டியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியிருப்புப் பகுதியில் நடந்த இந்தத் திடீர் படுகொலைச் சம்பவம் மஞ்செரியல் நகர மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த உள்ளூர் போலீசார், உயிரிழந்த செய்தியாளர் மோகனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தப்பியோட முயன்ற மனைவி ஜமுனாவைக் கைது செய்துள்ள போலீசார், இக்கொலையின் பின்னணியில் உள்ள துல்லியமான காரணம் மற்றும் முழுக் குற்றப்பின்னணி குறித்து அனைத்துக் கோணங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
