CRIME
“அந்த ஸ்பெஷல் கெமிக்கலை ஊத்துனா போதும்..!” ரூ.500 நோட்டை வைத்து தொழிலதிபர்களை நம்பவைத்து கில்லாடி பெண்கள் செய்த மாயாஜால மோசடி.. அம்பலமான அதிர்ச்சி பின்னணி..!!
அப்பாவித்தனமான முகம், ஆபத்தான ஆட்டம் என்ற பின்னணியில், பார்ப்பதற்கு மிகவும் அமைதியாகத் தெரிந்த இரு இளம் பெண்கள் பெரும்புள்ளிகளைத் தங்களது ஆசை வலையில் வீழ்த்தி சுமார் ரூ.1.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள நூதனச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த இரு பெண்களும் திட்டமிட்டு முதலில் பெரும் தொழில் அதிபர்கள் மற்றும் பணக்கார ஆண்களைத் தங்களது அழகான தோற்றத்தாலும் பேச்சுகளாலும் கவர்ந்து வலையில் விழ வைத்துள்ளனர். அவர்கள் முழுமையாக நம்பிய பிறகுதான், தாங்கள் வைத்திருந்த சில உண்மையான ரூ.500 நோட்டுகள் மற்றும் கருப்புச் சாயம் பூசப்பட்ட தாள்களைக் கொண்டு தங்களது உண்மையான ஏமாற்று ஆட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
மோசடி செய்ய நினைக்கும் நபரை நம்ப வைப்பதற்காக, கருப்புச் சாயம் பூசப்பட்ட தாள்களின் மீது தங்களது வசம் உள்ள ஒரு ‘சிறப்பு இரசாயனத்தை’ ஊற்றி, அதனை உண்மையான ரூ.500 நோட்டுகளாக மாற்றிக் காட்டி வித்தை செய்துள்ளனர். இந்த மாயாஜால ஏமாற்று வித்தையை உண்மை என நம்பி, அந்த இரசாயனத்தையும் கருப்புத் தாள்களையும் வாங்குவதற்காகத் தொழிலதிபர்கள் பலர் தங்களது கோடிக்கணக்கான பணத்தை இந்தப் பெண்களிடம் கொடுத்து ஏமாந்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் காவல்துறைக்குச் சென்றுள்ளது. காவல்துறையினர் நடத்திய அதிரடித் தேடுதல் வேட்டையில் இந்த இரு கில்லாடிப் பெண்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
