என்ன செய்கிறார் டம்மி முதலமைச்சர்..? தமிழகத்தில் அடுத்தடுத்து கொலைகள்.. – உதயநிதி காட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன செய்கிறார் டம்மி முதலமைச்சர்..? தமிழகத்தில் அடுத்தடுத்து கொலைகள்.. – உதயநிதி காட்டம்..!!

Published

on

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசைத் தன் எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த 2 நாட்களில் மட்டும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 9 கொலைகள் அரங்கேறியுள்ளதை அவர் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார். திருநெல்வேலியில் அண்ணன், தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம், சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் நடந்த இளைஞர் கொலை மற்றும் பரமக்குடியில் பெண் காவலர் உயிரிழந்த விவகாரம் ஆகியவற்றைத் தன் பதிவில் அவர் பட்டியலிட்டுள்ளார்.

மாநிலத்தில் குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, சேலம், கன்னியாகுமரி, தேனி கூடலூர் ஆகிய பகுதிகளிலும் அடுத்தடுத்து கொலைகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற முறையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் வேளையில், தற்போதைய அரசு மக்கள் நலனில் அக்கறையின்றிச் செயல்படுவதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Advertisement

இப்படித் தொடர்ச்சியாகக் கொலைச் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையிலும், அரசு எவ்விதத் தீவிர நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதாகக் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், “என்ன செய்கிறார் டம்மி முதலமைச்சர்?” எனத் தனது பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த “ரீல்ஸ் (Reels) ஆட்சியை” யாருக்காக முதலமைச்சர் நடத்துகிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை உடனடியாக நிலைநாட்ட முதலமைச்சர் விஜய் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in