CRIME
“நடுரோட்டில் நடந்த சிங்கப் பெண்களின் சண்டை…” போலீசாரையே அலறவிட்ட இரண்டு பெண்கள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தாட்டிப்பூர் காவல் நிலையத்திற்கு வெளியே, இரு பெண்கள் நடுரோட்டில் பூதாகரமாக மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பரவி வருகிறது. பீம் ஆர்மி இளைஞர் புரட்சி அமைப்பின் தேசியத் தலைவரான ராதா சைனி என்பவர், பழைய வழக்கு ஒன்றில் காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து அந்தத் காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்தச் சமயத்தில், அவ்வழியாகச் சென்ற மற்றொரு பெண்ணுடன் ராதா சைனிக்கு திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தர்க்கம் அடுத்த சில நிமிடங்களிலேயே எல்லையை மீறி, இருவரும் ஒருவரையொருவர் சட்டைப் பிடித்துக் கொண்டு நடுரோட்டிலேயே பயங்கரமாகத் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு மோதலாக மாறியுள்ளது. காவல் நிலையத்தின் வாசலிலேயே திடீரென ஏற்பட்ட இந்த எதிர்பாராத கூச்சலையும் பரபரப்பையும் கண்டு அதிர்ச்சியடைந்த காவல் நிலையப் பொறுப்பாளர் மற்றும் போலீஸார் உடனடியாக வெளியே ஓடிவந்துள்ளனர். சாலையில் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த இரு பெண்களையும் போலீஸார் பலவந்தமாகப் போராடிப் பிரித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்
