அடப்பாவமே.. பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் மனிதநேயமற்ற செயல்.. கிராம மக்கள் அதிரடி காரியம்.. வைரலாகும் நெஞ்ச உருக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

அடப்பாவமே.. பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் மனிதநேயமற்ற செயல்.. கிராம மக்கள் அதிரடி காரியம்.. வைரலாகும் நெஞ்ச உருக்கும் வீடியோ..!!

Published

on

ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில், பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துச் செல்ல வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், கிராமத்திற்குள் வர மறுத்ததால், உறவினர்கள் அப்பெண்ணைக் கட்டிலில் சுமந்து கொண்டு ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. சத்ரா பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்குத் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ், சப்னோ பகுதிக்கு அருகே வந்து நிறுத்தப்பட்டது. அங்கிருந்து கிராமத்திற்குச் செல்லும் வழி பள்ளத்தாக்காகவும், கரடுமுரடானதாகவும் இருப்பதாகக் கூறி, அதற்கு மேல் வாகனத்தை ஓட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

அப்பெண்ணின் தந்தை ராஜ்தேவ் கஞ்சு, தனது மகள் பிரசவ வலியால் துடிப்பதைச் சுட்டிக்காட்டி, கிராமத்திற்குள் வருமாறு ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் நீண்ட நேரம் கெஞ்சிக் கூத்தாடியும் அவர் மனம் இரங்கவில்லை. வேறு வழியின்றி நிலைகுலைந்த குடும்பத்தினரும் கிராம மக்களும், பிரசவ வலியால் கத்திக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை ஒரு மரக் கட்டிலில் படுக்க வைத்து, தங்களது தோள்களில் சுமந்தபடி ஒன்றரை கிலோமீட்டர் தூரம் கரடுமுரடான பாதையில் நடந்தே சென்று பிரதான சாலையை அடைந்தனர். அதன் பின்னரே, அங்கு காத்திருந்த ஆம்புலன்ஸ் மூலம் அந்தப் பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த அவல நிலை மற்றும் மனிதநேயமற்ற செயல் குறித்த வீடியோக்கள் வெளியாகி, ஜார்கண்டின் கிராமப்புற மருத்துவக் உள்கட்டமைப்பைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in