CRIME
அடக்கடவுளே.. ஆட்டோவுக்கு வழிவிட முயன்றபோது நிலைதடுமாறிய ஸ்கூட்டர்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள படங்பேட்டையில், ஆட்டோ மோதாமல் இருக்க ஸ்கூட்டரை திருப்ப முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த பிரசன்னலட்சுமி (29) என்ற பெண், பின்னால் வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நாதர்குல் பகுதியைச் சேர்ந்த இப்பெண், தனது ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் அல்மாஸ்குடா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மாருதிநகர் அருகே இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. ஆட்டோவிற்கு வழிவிட முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த அதே நொடியில், அருகில் கடந்து சென்ற டிராக்டரின் பின் சக்கரம் அவரது தலையின் மீது ஏறியதால், கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் அந்த இடத்திலேயே துடிதுடித்துப் பலியானார். இந்த நெஞ்சை உலுக்கும் விபத்துக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
விபத்து நடந்த உடனேயே டிராக்டரை அங்கேயே போட்டுவிட்டு அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த மீர்பேட் போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள டிராக்டர் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் சோசியல் மீடியாக்களில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
