CRIME
அடச்சீ… மனுஷனுங்களாடா நீங்க..?! 47 கி.மீ நரக வேதனை.. ஓடும் பேருந்தில் 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… 400 பக்க ஆதாரங்களோடு பாய்ந்த அதிரடி வழக்கு..!!
கிரேட்டர் நோய்டாவின் பரி சவுக்கிலிருந்து டெல்லியின் காஷ்மீரி கேட் வரை இயங்கிய நகரும் ஸ்லீப்பர் பேருந்தில், 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் டெல்லி காவல் துறை தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் 50 அரசுத் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இதனுடன் தொடர்புடைய தடயவியல் அறிக்கையையும் காவல் துறை குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாகச் சேர்த்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இச்சம்பவம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடந்துள்ளது. கிரேட்டர் நோய்டாவின் பரி சவுக்கிலிருந்து டெல்லிக்குச் செல்வதற்காக அந்தச் சிறுமி பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் இருந்த நடத்துனர் அவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும், எதிர்த்தபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர் குல்தீப் மற்றும் நடத்துனர் சந்தீப் ஆகிய இருவரும் நகரும் பேருந்திலேயே சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்தப் பேருந்து பரி சவுக்கிலிருந்து செக்டார்-63 வழியாக நோய்டாவைக் கடந்து டெல்லி நோக்கிச் சென்றுள்ளது.
சுமார் 47 கிலோமீட்டர் தூரம் பயணித்த அந்தப் பேருந்து டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியை அடைந்ததும், சிறுமியை காஷ்மீரி கேட் ஐ.எஸ்.பி.டி அருகே இறக்கிவிட்டுவிட்டு, குற்றவாளிகள்பேருந்தை திமார்பூரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி தைரியமாக காஷ்மீரி கேட் மெட்ரோ காவல் நிலையத்தை அடைந்து புகார் அளித்ததன் பேரில் காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் பேருந்தைக் கண்டறிந்த காவல் துறையினர், சிறுமியின் வாக்குமூலம் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரையும் கைது செய்தனர். தற்போது போக்சோ சட்டப் பிரிவு 6 மற்றும் பிஎன்எஸ் சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
