அடக்கடவுளே…! பள்ளி முடிந்து வீடு திரும்பிய சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… ஒரே நேரத்தில் பறிபோன 3 பிஞ்சு உயிர்கள்.. நெஞ்சை பிழியும் சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே…! பள்ளி முடிந்து வீடு திரும்பிய சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… ஒரே நேரத்தில் பறிபோன 3 பிஞ்சு உயிர்கள்.. நெஞ்சை பிழியும் சோகம்..!!

Published

on

ஜார்ஜண்ட் மாநிலம் ஜாம்தாடா மாவட்டத்தில் உள்ள சதர் காவல் எல்லைக்குட்பட்ட சேகாய்டீ கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிராமத்தைச் சேர்ந்த ஜமிசுதீன் அன்சாரியின் 5 வயது மகன் ஆர்யன் அன்சாரி, சஜாவுதீன் அன்சாரியின் 6 வயது மகன் சொஹேல் அன்சாரி மற்றும் தபாரக் அன்சாரியின் 6 வயது மகன் நாசிர் அன்சாரி ஆகிய மூன்று சிறுவர்களும் நண்பர்கள். செவ்வாய்க்கிழமை மதியம் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய இவர்கள், சிறிது நேரத்திற்குப் பிறகு விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்று, கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு குளத்தின் அருகில் சென்றுள்ளனர்.

குளத்தை அடைந்த மூன்று சிறுவர்களும் நீரில் இறங்கி குளிக்கத் தொடங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கால் நழுவி, குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியுள்ளனர். சிறுவர்கள் மூழ்குவதைக் கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக குளத்தில் இறங்கி அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மூவரும் நீரிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

Advertisement

இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் சதர் காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உள்ளூர்வாசிகளின் உதவியுடன் சடலங்களை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததால் குடும்பத்தினரும், கிராம மக்களும் பேரதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியுள்ளனர். ஜார்கண்டில் கடந்த வாரம் பலாமு மாவட்டத்திலும் இதேபோல் நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in