LATEST NEWS
“அட கடவுளே… என்ன கொடுமை இது..! 11 நாள் பச்சிளம் குழந்தையைக் காப்பாற்ற தாய் செய்த செயல்.. கடைசியில் நடந்த கொடூரம்..!!
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள முஃபுசில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஹராபாங்க் கிராமத்தில் ஒரு குடும்பம் குளிர் தாங்க முடியாமல் அறையில் கரி அடுப்பு பற்றவைத்து தூங்கியது அவர்களுக்கு பெரும் விபரீதமாக மாறியுள்ளது. 11 நாள் மட்டுமே ஆன தனது பச்சிளம் குழந்தையைக் குளிரில் இருந்து பாதுகாப்பதற்காக தாய் ரீனா தேவி இரவில் அந்த அறையில் கரி அடுப்பை எரித்துள்ளார். ஆனால், வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டிருந்ததால், அடுப்பிலிருந்து வெளியேறிய புகையானது அந்த அறை முழுவதும் பரவி ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
காலை நேரம் ஆகியும் அந்த அறைக் கதவுகள் திறக்கப்படாததால் உறவினர்களுக்கு ஏதோ விபரீதம் நேர்ந்திருப்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக வலுக்கட்டாயமாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு தாய் மற்றும் மூன்று பெண் குழந்தைகளும் மூச்சுத் திணறி சுயநினைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அனைவரையும் மீட்டு தும்கா புலோ பூல் ஜானோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரிசோதித்த மருத்துவர்கள் 6 வயது சிறுமியான நிக்கி குமாரி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதேவேளையில், சிறுமியின் தாயாரான ரீனா தேவி மற்றும் மற்றொரு சிறுமியான ரூபாலி குமாரி ஆகியோரின் உடல்நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், 11 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
