“உங்களை கொ***வேன்..” மதுபோதையில் சவால்… கழுத்தை நெரித்துக் கொன்று புதரில் வீசிய உயிர்த்தோழர்கள்..! திடுக்கிடும் பின்னணி! – cinefeeds
Connect with us

CRIME

“உங்களை கொ***வேன்..” மதுபோதையில் சவால்… கழுத்தை நெரித்துக் கொன்று புதரில் வீசிய உயிர்த்தோழர்கள்..! திடுக்கிடும் பின்னணி!

Published

on

ஜார்க்கண்ட் மாநிலம் தலைநகர் ராஞ்சியில் உள்ள துர்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொடூரமான கொலைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கடந்த நவம்பர் 6-ஆம் தேதி, சித்தியோ கிராமத்தில் உள்ள அணைப் பகுதிக்கு அருகில் உள்ள புதர்களுக்குள் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி, பின்னர் அந்த நபர் ராஞ்சியின் துர்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டார்-9, சர்மா மார்க்கெட்டைச் சேர்ந்த 31 வயதுடைய பிட்டு சிங் என்பவரைக் கண்டறிந்தனர். உயிரிழந்தவரின் தந்தை ஓம் பிரகாஷ் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், பிட்டு சிங்கின் நண்பர்களான சஞ்சய் குமார் சிங் மற்றும் பாபி விஸ்வகர்மா ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கடந்த நவம்பர் 5-ஆம் தேதி இரவு, பிட்டு சிங் தனது இந்த இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளான். அப்போது ஏற்பட்ட தகராறில், போதையில் இருந்த பிட்டு சிங் தன் நண்பர்களைத் திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் இருவரும் சேர்ந்து அவனுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் இருவரும் மரத் தடியால் பிட்டு சிங்கைத் தாக்கியுள்ளனர்; இதனால் அவர் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார். அதன்பிறகு இருவரும் சேர்ந்து கயிற்றால் அவரது கழுத்தை நெரித்து கொலையை அரங்கேற்றியுள்ளனர். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அவரது உடலை அணைப் பகுதிக்கு அருகில் உள்ள புதர்களுக்குள் வீசிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். தற்போது ராஞ்சி போலீசார் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரு நண்பர்களையும் கைது செய்துள்ளனர்டன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கார், இரண்டு செல்போன்கள் மற்றும் மரத் தடி ஆகியவற்றை மீட்டுக் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in