CRIME
“ஓயோ விடுதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!” மருத்துவமனையில் இருந்து தப்பிய காதலன் செய்த காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
ஹைதராபாத் மாதப்பூர் ஓயோ விடுதி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியான ஸ்ரீனிவாஸ் ரவி தேஜாவை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். விசாலாட்சிபட்டினத்தைச் சேர்ந்த ஷரோன் நிகிதா என்ற இளம்பெண்ணுடன் விடுதி அறையில் தங்கியிருந்த ரவி தேஜா, கடந்த வாரம் நிகிதாவைத் தாக்கி படுகொலை செய்துள்ளார். காவல்துறையினரின் தீவிர விசாரணையின் போது, தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தில் நிகிதாவின் தலையைச் சுவரில் முட்டி அவர் கொலை செய்ததாகக் குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளார்.
கொலை நடந்த மறுநாள் காலை, நிகிதா மயக்கமடைந்துவிட்டதாகக் கூறி விடுதி ஊழியர்களின் உதவியுடன் அவரை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளார் ரவி தேஜா. அங்கு நிகிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதியளித்ததை அடுத்து, அவர் மருத்துவமனையிலிருந்து தப்பியோடித் தலைமறைவானார். பின்னர் தனது சொந்த ஊருக்குச் சென்று தரை துடைக்கும் திரவத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை, உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்பொழுது சிகிச்சைக்குப் பின் குணமடைந்த ரவி தேஜாவை போலீஸ் காவலில் எடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
