பகீர்..! ஜோதிடர் சொன்ன ஒரு வார்த்தை… “என் சித்திதான் செய்வினை வச்சிருப்பா” நள்ளிரவு 12 மணிக்கு கழுத்தை அறுத்த சலூன்கடைக்காரர்… மூடநம்பிக்கை பலி வாங்கிய உயிர்..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்..! ஜோதிடர் சொன்ன ஒரு வார்த்தை… “என் சித்திதான் செய்வினை வச்சிருப்பா” நள்ளிரவு 12 மணிக்கு கழுத்தை அறுத்த சலூன்கடைக்காரர்… மூடநம்பிக்கை பலி வாங்கிய உயிர்..!!

Published

on

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கண்டகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவப்பா என்பவரின் மனைவி சரசம்மா (50). கூலி வேலை செய்து வந்த இவர்களது வீட்டின் அருகிலேயே, சிவப்பாவின் அண்ணன் சோமப்பாவும் அவரது குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். சோமப்பாவின் மகனான அசோக் (27) என்பவர் அந்தப் பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

கடந்த சில காலமாக அசோக்கிற்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்ததோடு, அவரது சலூன் கடையிலும் வியாபாரம் சரிவர நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது குடும்பத்தினர் ஜோதிடம் பார்த்தபோது, யாரோ அவர்களுக்கு ‘செய்வினை’ வைத்திருப்பதாக ஜோதிடர் கூறியுள்ளார். இந்தச் செய்வினையைத் தனது சித்தி சரசம்மா தான் செய்திருப்பார் என அசோக் பலமாக சந்தேகித்ததால், இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

இந்தச் சூழ்நிலையில், கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி இரவு 11 மணியளவில் அசோக் மது போதையில் தனது சித்தி சரசம்மாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த சிவப்பா மற்றும் சரசம்மாவிடம் அவர் மீண்டும் செய்வினை குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அசோக், சரசம்மாவின் கழுத்தை அறுத்ததில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை செய்த பின் அங்கிருந்து தப்பியோடிய அசோக், நள்ளிரவு 12.30 மணியளவில் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சென்று தானே சரணடைந்தார். அவரை உடனடியாகக் கைது செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரசம்மாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மூடநம்பிக்கை மற்றும் செய்வினை சந்தேகத்தால் சித்தியைக் கொடூரமாகக் கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in