CRIME
“ஐயோ கொடுமையே.. துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் சடலம்..” ஆட்டிறைச்சி கடைக்காரரின் வெறிச்செயல்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!
ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவில் மங்களகிரியைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, உடல் துண்டாக்கப்பட்ட வழக்கில் 35 வயதான ஆட்டிறைச்சி கடை உரிமையாளர் முகமது ஷாபி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 18 அன்று இப்ராஹிம்பட்னத்தில் உள்ள வி.டி.பி.எஸ். குளிரூட்டும் கால்வாயில் தலையற்ற உடல் பகுதி கண்டெடுக்கப்பட்டதை அடுத்து இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த நாள் ட்ரோன்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தலை, கால்கள் உள்ளிட்ட பிற உடல் உறுப்புகள் மீட்கப்பட்டன; அவரது கையில் இருந்த பச்சை குத்தலை வைத்து அவரது சகோதரர் கல்யாணியின் உடலை அடையாளம் காட்டினார்.
உதவி காவல்துறை ஆணையர் துர்கா ராவ் இதுகுறித்து தெரிவிக்கையில், செப்டம்பர் 17 அன்று பவானிபுரத்தில் உள்ள முகமது ஷாபியின் வீட்டில் வைத்து இந்தக் கொலை நடந்துள்ளது என்று விசாரணையில் உறுதியாகியுள்ளது. தனது மனைவி மற்றும் குழந்தைகளை குண்டூருக்கு அனுப்பிவிட்டு, கல்யாணியை வீட்டிற்கு வரவழைத்த ஷாபி, பணம் மற்றும் அவரது குடும்பப் பராமரிப்பில் இருந்த குழந்தை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கல்யாணியின் தொண்டையை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அடையாளத்தை மறைப்பதற்காக கல்யாணியின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசியுள்ளார்; இக்கொலைக்கு உதவியாக இருந்த ஷாபியின் நண்பர் அப்துல்லா துர்கா ராவை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
