“நள்ளிரவில் ஏடிஎம்-க்குள் திருடர்கள்..” வெளியிலிருந்து பெண் மேலாளர் செய்த மாஸ் காரியம்.. அலறிய கொள்ளையர்கள்.. பெரும் பரபரப்பு சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நள்ளிரவில் ஏடிஎம்-க்குள் திருடர்கள்..” வெளியிலிருந்து பெண் மேலாளர் செய்த மாஸ் காரியம்.. அலறிய கொள்ளையர்கள்.. பெரும் பரபரப்பு சம்பவம்..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் நாகூரில், யூகோ வங்கி ஏடிஎம்-ஐ கேஸ் கட்டர் மூலம் கொள்ளையடிக்க முயன்ற இரண்டு திருடர்களை, பெண் வங்கி மேலாளர் சாதுரியமாகச் செயல்பட்டு ஏடிஎம் பூத்திற்குள்ளேயே பூட்டிப் பிடித்த அதிரடிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூண்ட்வா பகுதியில் உள்ள இந்த ஏடிஎம் பூத்திற்குள், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கேஸ் கட்டர் மற்றும் ஆயுதங்களுடன் நுழைந்த இரு திருடர்கள், இயந்திரத்தை உடைத்துப் பணத்தை அள்ளத் திட்டமிட்டுள்ளனர். வங்கிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், அந்த ஏடிஎம் இயந்திரத்தில் சுமார் ரூ.16 லட்சத்து 900 ரொக்கப் பணம் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, வங்கியின் அதிநவீன ‘இ-சர்வைலன்ஸ்’ பாதுகாப்பு சிஸ்டம் மூலம் ஏடிஎம்-க்குள் மர்ம நபர்கள் நுழைந்ததை வங்கியின் பாதுகாப்பு அதிகாரி கண்டுபிடித்து, உடனே கிளை மேலாளர் சாரிகா சவுத்ரிக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் கிடைத்த அடுத்த கணமே, பெண் மேலாளர் சாரிகா சவுத்ரி பயந்து பின்வாங்காமல், தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் நள்ளிரவிலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார். ஏடிஎம்-க்குள் திருடர்கள் இயந்திரத்தை வெட்டிக் கொண்டிருப்பதை நேரில் கண்ட அவர், சத்தமில்லாமல் வெளியிலிருந்து ஏடிஎம் பூத்தின் இரும்பு ஷட்டரை கீழே இறக்கிப் பூட்டி, திருடர்களை உள்ளேயே சிறைவைத்தார். பின்னர் போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மார்வார் மூண்ட்வா போலீசார், பூட்டுக்குள் சிக்கியிருந்த பரத் பிரஜாபத் மற்றும் பீகாரைச் சேர்ந்த கோமல் குமார் ஆகிய இரு திருடர்களையும் கச்சிதமாகக் கைது செய்தனர். பெண் வங்கி மேலாளரின் இந்த அசாத்திய துணிச்சலும் சமயோசித புத்தியும் லட்சக்கணக்கான வங்கிப் பணத்தைக் காப்பாற்றியுள்ளதுடன், இணையத்திலும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in