“ஹீல் பண்றேன்னு வந்தா… ஹீல்ஸுலையே அடி..!” ஆர்த்தி ரவியின் வெறித்தனமான இன்ஸ்டா போஸ்ட்… யாருக்கு இந்த சாட்டையடி..? ஆடிப்போன சோஷியல் மீடியா..!! – cinefeeds
Connect with us

CINEMA

“ஹீல் பண்றேன்னு வந்தா… ஹீல்ஸுலையே அடி..!” ஆர்த்தி ரவியின் வெறித்தனமான இன்ஸ்டா போஸ்ட்… யாருக்கு இந்த சாட்டையடி..? ஆடிப்போன சோஷியல் மீடியா..!!

Published

on

திரைப்பட நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியான ஆர்த்தி ரவியை விட்டுப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்து மோதல்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எவனாச்சும் உன்ன ஹீல் பண்றேன்னு வந்தா ஹீல்ஸுலையே அடிச்சு துரத்திரு” என்று அதிரடியாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவில் அவர் யாருடைய பெயரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இது இணையதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்தப் பதிவு பாடகி கெனிஷாவை மறைமுகமாகத் தாக்கிப் பதிவிடப்பட்டதாகவே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனெனில், ஜெயம் ரவிக்கு ஆன்மீக மற்றும் மனநல வழிகாட்டியாக (Healer) அறிமுகமான கெனிஷா, அதன்பின்னர் அவருடன் நெருங்கிய நட்பு பாராட்டி பொதுவெளியிலும் ஒன்றாக வலம் வரத் தொடங்கினார். இதைக் குறிப்பிட்டே ஆர்த்தி ரவி இந்த ‘ஹீலர்’ மற்றும் ‘ஹீல்ஸ்’ வார்த்தை விளையாட்டின் மூலம் கெனிஷாவை மறைமுகமாக விமர்சித்துள்ளார் எனச் சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் வலுத்து வருகின்றன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in