“நள்ளிரவு 2 மணிக்கு மனைவி செய்த காரியம்..” அதிர்ச்சியில் விழி பிதுங்கிய கணவர்…தமிழா தமிழா அரங்கில் நடந்த அட்ராசிட்டி..!! – cinefeeds
Connect with us

CINEMA

“நள்ளிரவு 2 மணிக்கு மனைவி செய்த காரியம்..” அதிர்ச்சியில் விழி பிதுங்கிய கணவர்…தமிழா தமிழா அரங்கில் நடந்த அட்ராசிட்டி..!!

Published

on

இன்று பல தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக அமைந்து பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. அதே போன்று மற்றொரு தொலைக்காட்சியில் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் ‘தமிழா தமிழா’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியும் பல்வேறு சுவாரஸ்யமான தலைப்புகளுடன் விவாதங்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில், இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘ஆசையாய் செலவு செய்யும் மனைவிகள் மற்றும் அச்சப்படும் கணவர்கள்’ என்ற சுவாரஸ்யமான தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் ஒருவர், தனது கணவர் தூங்கிய பின்பு நள்ளிரவில் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதாகவும், காலையில் கணவர் அதனை அறிந்ததும் தனக்கு பயமாக இருப்பதாகவும் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

Advertisement

மற்றொருவரோ, தனது மனைவி தான் அணியும் ஹெல்மெட் கலரில் பைக் இல்லை என்பதற்காகவே பைக்கையே மாற்றிவிட்டதாக அரங்கத்தில் புலம்பியுள்ளார். மேலும், அவ்வாறு பேசிய பெண் ஒருவர் ஆசிரியர் என்று கூறியதைக் கேட்டு தொகுப்பாளர் கோபத்தில் கொந்தளித்ததுடன், இப்படியும் பெண்கள் இருக்கின்றார்களா என்ற கேள்வியையும் பார்வையாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in