CRIME
பதறவைக்கும் குடும்பத் தகராறு..! மனைவியை அடித்துக் கொன்று சுடுகாட்டில் எரித்த கணவன்… உடந்தையாக இருந்த மாமனாரும் கைது..!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (34). இவருடைய மனைவி சிவகாமி (30). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வழக்கம்போல அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு முற்றியுள்ளது.
இந்தத் தகராறில் கோபமடைந்த ரவிச்சந்திரன், தனது மனைவி சிவகாமியைத் தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்ததாகத் தெரிகிறது. இதனால் பதறிப்போன ரவிச்சந்திரன், என்ன செய்வதென்று தெரியாமல் சிவகாமியின் உடலைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரித்துள்ளார்.
இதற்கிடையே, கிராம உதவியாளர் வட்டாட்சியரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மனைவியைக் கொன்று உடலை எரித்த ரவிச்சந்திரனையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தையையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
