“அம்மா… காப்பாத்துங்க…” தெருவில் விளையாடிய சிறுவனின் முகத்தை கடித்துக் குதறிய நாய்.. நெஞ்சை உறையவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மா… காப்பாத்துங்க…” தெருவில் விளையாடிய சிறுவனின் முகத்தை கடித்துக் குதறிய நாய்.. நெஞ்சை உறையவைக்கும் வீடியோ..!!

Published

on

ஹரியானா மாநிலம் அம்பாலா செக்டர் 9 பகுதியில், வீதியில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை அங்கிருந்த தெரு நாய் ஒன்று மிகக் கொடூரமாகக் கடித்துக் குதற முயன்ற பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நாய் சிறுவனைத் தாக்கியபோது, அவன் பயத்தில் அலறியடி சத்தமிட்டு உதவிக்காகக் கூச்சலிட்டுள்ளான். சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த இரண்டு பெண்கள், உடனடியாக அந்த நாயை விரட்டி அச்சிறுவனைப் பத்திரமாக மீட்டனர்.

இருப்பினும், இந்த கொடூரத் தாக்குதலில் அந்தச் சிறுவனுக்கு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், தெருவில் திரியும் ஒற்றை நாய் கூடக் குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய உயிராபத்தாக மாறக்கூடும் என்பதை இந்த விபத்து உணர்த்தியுள்ளதாகப் பொதுமக்கள் சமூக ஊடகங்களில் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in