CRIME
“அடக்கடவுளே.. வரதட்சணைக்காக இப்படியா…? மனைவியைக் கொன்று ஃபேனில் தொங்கவிட்டு நாடகமாடிய கணவன்… விசாரணையில் அம்பலமான பகீர் உண்மை..!!
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் தனது மனைவியைக் கொலை செய்து, அதைத் தற்கொலை என சித்தரிக்க முயன்றதாக 38 வயது நபர் ஒருவரைப் புதன்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜ்நகர் காவல் எல்லைக்குட்பட்ட கர்ஜனாபூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மேந்திர ரவுத் என்பவரே, தனது 34 வயது மனைவி சுஜாதா ரவுத்தைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையான கோஷிகாவ் கிராமத்தைச் சேர்ந்த ஹல்தர் பிரதான் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், 2017-இல் திருமணம் நடந்ததிலிருந்தே கூடுதல் வரதட்சணை கேட்டுத் தனது மகளைக் கணவர் தொடர்ச்சியாகச் சித்திரவதை செய்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். புதன்கிழமை காலையில் சுஜாதாவை தர்மேந்திரா கொலை செய்துவிட்டு, தற்கொலை போலக் காட்டுவதற்காகப் பிணத்தைச் சீலிங் ஃபேனில் தொங்கவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், சுஜாதாவின் உடலில் பல காயங்கள் இருந்ததால் மரணத்தில் சந்தேகம் வலுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளி புதன்கிழமை ராஜ்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரது பிணை மனுவை நிராகரித்து, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
