CRIME
“போலீசுக்கே தண்ணி காட்டிய போலீஸ்..” ரூ.10,000 லஞ்சத்திற்காக குளத்தில் குதித்த சப்-இன்ஸ்பெக்டர்.. ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை செய்த ‘ட்விஸ்ட்’ தான் ஹைலைட்.. பரபரப்பு பின்னணி..!!
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் குமார் மொஹந்தா, லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் இருந்து தப்பிக்க குளத்தில் குதித்து ஓடிய பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைப் பிடிக்க வந்ததை அறிந்தவுடன், அவர் தப்பியோடி அருகில் இருந்த குளத்தில் குதித்தார். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சளைக்காமல் குளத்தில் நீந்திச் சென்று, அவரைத் தண்ணீருக்குள்ளேயே மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரின் அறையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தபோது, கணக்கில் வராத ரூ.1.55 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சம் வாங்கிவிட்டுப் தப்பிக்கக் குளத்தில் குதித்த போலீஸ் அதிகாரியை லஞ்ச ஒழிப்புப் படையினர் நீந்திச் சென்று கைது செய்த இந்த சினிமா பாணி அதிரடி நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
