“ஆதாரங்களை மொத்தமா தூக்குங்க..!” கரூர் கம்பெனி’ மீது பாய்ந்த CM விஜய்… தலைமைச் செயலகத்தில் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆதாரங்களை மொத்தமா தூக்குங்க..!” கரூர் கம்பெனி’ மீது பாய்ந்த CM விஜய்… தலைமைச் செயலகத்தில் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

Published

on

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய், ‘கரூர் கம்பெனி’ என்றழைக்கப்படும் சட்டவிரோத மதுபானம் மற்றும் பார் தொடர்பான விவகாரங்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டத் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்களின்படி, இந்த விவகாரம் தொடர்பான அனைத்துப் பழைய மற்றும் புதிய ஆதாரங்களையும் உடனடியாகத் திரட்டுமாறு காவல்துறை மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்குப் பறப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கத் தயங்கும் பார் உரிமையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய தைரியமும் பாதுகாப்பும் அளித்து, உடனடியாக வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என அவர் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

டாஸ்மாக் நிருவாகம், சட்டவிரோத பார் உரிமையாளர்கள் மற்றும் இதன் பின்னணியில் உள்ள செல்வாக்குமிக்க நபர்கள் என யாரையும் தப்பவிடாமல் அனைவரையும் முழுமையாக விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அரசின் இந்த அதிரடி மற்றும் இறுகிய போக்கைப் பார்க்கும்போது, இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் சட்டத்தின் முன் நிறுத்திச் சிறையிலடைக்கும் வரை ஓய்வடைய மாட்டார் என்ற பேச்சு அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in