LATEST NEWS
“பெண் குழந்தை பிறப்பது ஒரு வரம்” 5 தசாப்தங்களாக வெறும் ஆண் குழந்தைகள் மட்டுமே.. முதன்முறையாகப் பிறந்த பெண் குழந்தை… ஆனந்த கண்ணீரில் கொண்டாடிய குடும்பம்..!!
ஒரு குடும்பத்தில் சுமார் 52 ஆண்டுகள் காலமாக வெறும் ஆண் குழந்தைகள் மட்டுமே பிறந்து வந்த நிலையில், முதன்முறையாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறியதால், மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டர் வாசலில் காத்திருந்த குடும்பத்தினர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தை பிறந்த செய்தி தெரிந்தவுடன் அவர்கள் கைகளைக் கூப்பி, ஆனந்தக் கண்ணீர் வடித்து, கைதட்டி தங்கள் வீட்டு ‘லட்சுமி’யை வரவேற்றனர்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தை டாக்டர் பெலா ஷா ஜெயின் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 20 பேர் ஆவலுடன் காத்திருப்பதும், மருத்துவர் குழந்தையை வெளியில் கொண்டு வந்தவுடன் அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியைக் கொண்டாடுவதும் பதிவாகியுள்ளது. இந்த நெகிழ்ச்சியான கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி, தற்பொழுது 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/DbFT87IsZPx/?utm_source=ig_web_button_share_sheet
இணையத்தில் இந்த வீடியோவைப் பார்த்த பலரும் தங்களின் நெகிழ்ச்சியான வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண் குழந்தைகள் பிறப்பையும் ஒரு குடும்பம் இவ்வளவு பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகப் பயனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பெண் குழந்தைகள் எல்லோர் வீட்டிற்கும் பிறப்பதில்லை என்றும், அது ஒரு வரம் என்றும் மக்கள் தங்களின் அன்பைப் பொழிந்து வருகின்றனர்
