CRIME
“பிறந்து 13 மணி நேரம் தான் ஆச்சு… அதுக்குள்ள இப்படியா..?” பெண் குழந்தையை தந்தையே செய்த கொடூர காரியம்.. கதறும் தாய்.. திடுக்கிடும் பின்னணி…!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற ஆத்திரத்தில் பெற்ற தந்தையே தனது பிறந்த 13 மணி நேரமே ஆன பெண் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. நீம்ரானாவைச் சேர்ந்த ரவி குமார் யாதவ் என்பவரின் மனைவி கோமலுக்கு ஜூலை 28 அன்று சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்றாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்த ரவி குமார், தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நேரத்தில் நள்ளிரவில் பராமரிப்பிற்காகத் தன் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
அதிகாலை வரை அழுது கொண்டிருந்த குழந்தையின் சத்தம் திடீரென நின்றதால் சந்தேகமடைந்த செவிலியர்கள் சோதித்துப் பார்த்தபோது, குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. செவிலியர் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் ரவி குமாரை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில், அவர் தனது கொடூர குற்றத்தை ஒப்புக்கொண்டார். சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் அதே வேளையில், மருத்துவமனை வளாகத்திற்குள் பச்சிளம் குழந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த பெரும் கேள்விகளையும் அதிர்ச்சியையும் எழுப்பியுள்ளது.
