LATEST NEWS
“ஷாக் நியூஸ்..! உங்கள் வீட்டு EB மீட்டர் கட் ஆகப்போகுது..!” உடனே இதைப் பண்ணுங்க.. TNEB வெளியிட்ட திடீர் அதிரடி உத்தரவு…!!
தமிழ்நாடு மின்சார வாரியம் தனது நிதி இழப்பைக் குறைக்கும் நோக்கத்துடன், தொடர்ந்து 90 நாட்களுக்கு மேல் எவ்விதப் பயன்பாடும் இல்லாமல் இருக்கும் மின் இணைப்புகளைக் கண்டறிந்து அவற்றை நிரந்தரமாக அகற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், பயன்பாட்டில் இல்லாத மின் மீட்டர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை தொடர்பான முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை தகவல்கள் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்சார வாரியத்தின் இந்தத் திடீர் முடிவு, வேலை மற்றும் தொழில் நிமித்தமாகத் தங்கள் சொந்த வீடுகளைப் பூட்டிவிட்டுப் பல மாதங்களாக வெளியூர்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ தங்கி வசசித்து வரும் குடும்பங்களுக்கு மிகப்பெரிய சிக்கலையும் கவலையையும் ஏற்படுத்தக்கூடும். குறுகிய கால இடைவெளியில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் பட்சத்தில், அவர்கள் மீண்டும் புதிய மின் இணைப்பு பெற அலைச்சல் மற்றும் கூடுதல் செலவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதால், இத்திட்டம் குறித்துப் பொதுமக்களிடையே பல்வேறு விவாதங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன.
