உச்சகட்ட கொடூரம்..! தூக்கில் தொங்கிய 22 வயது PG மருத்துவ மாணவி… நள்ளிரவில் நடந்த பகீர் விபரீதம்… ஆந்திர மருத்துவக்கல்லூரியில் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

உச்சகட்ட கொடூரம்..! தூக்கில் தொங்கிய 22 வயது PG மருத்துவ மாணவி… நள்ளிரவில் நடந்த பகீர் விபரீதம்… ஆந்திர மருத்துவக்கல்லூரியில் அதிர்ச்சி..!!

Published

on

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், ஆந்திரா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு முதுகலை (PG) மருத்துவக் கல்வி பயின்று வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரவணி (22) என்ற மாணவி, சீனா வால்டேர் பகுதியில் உள்ள தனது வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதற்கான துல்லியமான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை. பணிச்சுமை, தனிப்பட்ட காரணங்கள் அல்லது ஏதேனும் மன அழுத்தம் காரணமா என்ற கோணங்களில் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் சக மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in