“நீ கூப்பிட்ட ‘அங்கிள்’ இனி ஜெயிலுக்குள்ளேயே செத்துப் போவான்..!” 10 வயது சிறுமிக்கு நீதிபதி எழுதிய நெஞ்சை உலுக்கும் கடிதம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நீ கூப்பிட்ட ‘அங்கிள்’ இனி ஜெயிலுக்குள்ளேயே செத்துப் போவான்..!” 10 வயது சிறுமிக்கு நீதிபதி எழுதிய நெஞ்சை உலுக்கும் கடிதம்..!!

Published

on

டெல்லியில் போக்சோ வழக்கின் கீழ் தன் சொந்த மாமாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமியின் துணிச்சலான சாட்சியத்தை ஏற்று, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரஞ்சனி ரங்கா அச்சிறுமிக்கு நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடந்த 2023-இல் இந்த கொடுமை நடந்தபோது 7 வயதாக இருந்த அச்சிறுமி, “நான் பெரியவள் ஆகும் வரை குற்றவாளியை சிறையை விட்டு வெளியே விடக்கூடாது” என்று நீதிமன்றத்தில் தைரியமாக வாதாடியதை அடுத்து, அவருக்கு ரூ.10.50 லட்சம் இழப்பீடும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி தனது கடிதத்தில், “நீ ‘அங்கிள்’ என்று அழைத்த அந்த நபர் இனி தன் வாழ்நாள் முழுவதும் கூண்டுக்குள்ளேயே வாழ்ந்து அங்கேயே இறந்துபோவார்; இனி அவரால் உன்னையோ அல்லது வேறு எந்தக் குழந்தையையோ காயப்படுத்த முடியாது” என்று சிறுமிக்கு நம்பிக்கையளித்துள்ளார். மேலும், நீதிமன்றம் கண்டதிலேயே மிகவும் தைரியமான சிறுமி நீதான் என்று பாராட்டியதோடு, பள்ளிக்குச் சென்று, விளையாடி, மகிழ்ச்சியாக கனவு காணுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நீதிபதியின் இந்த நெகிழ்ச்சியான கடிதத்தையும் இழப்பீட்டுத் தொகையையும் சிறுமியிடம் உடனடியாகச் சேர்க்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in