“தாயும் இல்லை.. தகப்பனும் இல்லை..!” 15 வயது அனாதைச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… காதலன் தொடங்கி ஆம்புலன்ஸ் டிரைவர் வரை சிக்கிய காம கொடூரர்கள்.. குலை நடுங்க அவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“தாயும் இல்லை.. தகப்பனும் இல்லை..!” 15 வயது அனாதைச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… காதலன் தொடங்கி ஆம்புலன்ஸ் டிரைவர் வரை சிக்கிய காம கொடூரர்கள்.. குலை நடுங்க அவைக்கும் பின்னணி..!!

Published

on

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே 15 வயது சிறுமி ஒருவர் வீட்டில் இருந்து திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாய், தந்தையை இழந்த நிலையில் தாத்தா-பாட்டி பராமரிப்பில் வாழ்ந்து வந்த அந்த சிறுமி கடந்த ஜூலை 19-ம் தேதி காணாமல் போனதை அடுத்து, அவரது தாத்தா எடையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் நடத்தி, பத்து நாட்களுக்குப் பிறகு சிறுமியை மீட்டனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமிக்கு பலருடன் தொடர்பு ஏற்பட்டு, அந்த நம்பிக்கையை பயன்படுத்தி பல்வேறு கட்டங்களில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரியவந்தது.

விசாரணையில், விமல்ராஜ், மருத்துவமனை வார்டு ஊழியர் முத்துக்குமரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஜய் மற்றும் சங்கரய்யா ஆகியோர் சிறுமியிடம் நெருக்கம் ஏற்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக, சங்கரய்யா சிறுமியை திருப்பூருக்கு அழைத்துச் சென்று பலமுறை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விமல்ராஜ், முத்துக்குமரன் மற்றும் சங்கரய்யாவை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள விஜயை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in