அடக் கொடுமையே.. கோவில் விழாவில் கும்மியடித்த மனைவி… போதையில் வந்து கணவன் செய்த காரியம்.. 2 மகன்களுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக் கொடுமையே.. கோவில் விழாவில் கும்மியடித்த மனைவி… போதையில் வந்து கணவன் செய்த காரியம்.. 2 மகன்களுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடக்குசத்திரம் பகுதியில், கணவனின் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகத் தாயும் அவரது இரண்டு பிஞ்சு மகன்களும் தீக்கு இரையான கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெயிண்ட் தொழிலாளியான காளிப்பாண்டி என்பவருக்கும், மாரியம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரு மகன்கள் இருந்தனர். கடந்த 5ஆம் தேதி இரவு, அப்பகுதியில் நடைபெற்ற கோயில் கொடை விழாவில் மாரியம்மாள் பெண்களுடன் கும்மியடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு மதுபோதையில் வந்த காளிப்பாண்டி அவரைப் பலரறிய அவதூறாகப் பேசியுள்ளார். இதனால் வேதனையடைந்த மாரியம்மாள், தனது 5 மற்றும் 4 வயது மகன்களுடன் வீட்டிற்குத் திரும்பி, அவர்கள் மீதும் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்த போதிலும், உடல் கருகிய நிலையில் மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிருக்குக் போராடிய குழந்தைகள் கபினேஷ்வரன் மற்றும் ரபினேஷ்வரன் ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, நேற்ற காலை இரு குழந்தைகளும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரண்டு குழந்தைகளும் கணவனின் குடிப்பழக்கத்தால் மரணமடைந்த இந்தச் சோகச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோக அலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in