“அய்யோ கடவுளே.. 30 அடி ஆழப் பாதாள பள்ளத்தில் விழுந்த தம்பதி…” இரயில்வே தண்டவாளத்தில் நேர்ந்த விபரீதம்.. கணவனுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யோ கடவுளே.. 30 அடி ஆழப் பாதாள பள்ளத்தில் விழுந்த தம்பதி…” இரயில்வே தண்டவாளத்தில் நேர்ந்த விபரீதம்.. கணவனுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேந்து இரயில்வே கிராசிங் பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியினர் 30 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது நிலைதடுமாறி அவர்கள் இருவரும் படுபாதாள பள்ளத்திற்குள் விழுந்துள்ளனர். இந்த கொடூர விபத்தில் 30 வயதான கணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடன் சென்ற மனைவி அப்பள்ளத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பிஆர்பி அவசர உதவிக் குழுவினர், பள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணை மிகச் சாதுரியமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in