“நெஞ்சை நடுங்குது.. 12 அடி ஆழ தொட்டிக்குள் மறைந்திருந்த எமன்..” சுத்தம் செய்ய போன 4 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நெஞ்சை நடுங்குது.. 12 அடி ஆழ தொட்டிக்குள் மறைந்திருந்த எமன்..” சுத்தம் செய்ய போன 4 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பிருந்தாவனில் உள்ள சைதன்ய விஹார் பகுதியில் அமைந்துள்ள ‘மகரிஷி பாணினி சமஸ்கிருத குருகுலத்தில்’ நேற்று முன்தினம் இரவு தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 4 மாணவர்கள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 12 அடி ஆழமுள்ள அந்த நிலத்தடி நீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அதை ஆய்வு செய்ய முதலில் ஒரு மாணவர் உள்ளே இறங்கியுள்ளார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், அவரை மீட்பதற்காக அடுத்தடுத்து மற்ற மாணவர்களும் உள்ளே சென்றபோது தொட்டியில் தேங்கியிருந்த கொடூர விஷவாயுவைத் சுவாசித்து அனைவரும் மயக்கமடைந்தனர்.

இந்தக் கோர விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் காவல் துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மயக்கமடைந்த 5 மாணவர்களையும் மீட்டுக் கொண்டு சென்றதில், 4 மாணவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மற்றொரு மாணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, இந்த அலட்சிய விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in