“Township-க்குள் புகுந்த எமன்..” குப்பை லாரி சக்கரத்தில் சிக்கிய 10 வயது சிறுமி.. விளையாடச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்..நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“Township-க்குள் புகுந்த எமன்..” குப்பை லாரி சக்கரத்தில் சிக்கிய 10 வயது சிறுமி.. விளையாடச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்..நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

Published

on

இந்தூர் மாங்கலியா பைபாஸ் பகுதியில் உள்ள புமார்த் செரினிட்டி நகரியத்தில், நேற்று முன்தினம் 10 வயது சிறுமி ஒருவர் குப்பை சேகரிக்கும் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அந்தச் சிறுமி சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த குப்பை லாரியின் முன் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இந்த நெஞ்சை உலுக்கும் விபத்தின் முழு காட்சியும் அங்கிருந்த சிசிடிவி

கேமராவில் பதிவாகி தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

https://video-aajtak.tosshub.com/aajtak/video/2026_10/06_oct_26_garbage-vehicle-accident_512.mp4#t=0.5

இந்தக் கொடூர விபத்தில் படுகாயமடைந்த சிறுமி, உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள பாம்பே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகார் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அலட்சியமாக வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in